Posts

உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் !

உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டும் அது ரத்து செய்யப்பட்டது. 1) வார்டு வரையறை 2) இட ஒதுக்கீடு 3) 9 மாவட்டங்கள் பிரிப்பு முதலான பிரச்சினைகளை தி.மு.க. எழுப்பி நீதிமன்றத்தை அணுகியதால் புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டும் சிக்கல் நீடிக்கிறது. மீண்டும் திமுக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை  தேர்தல் ஆணையம் மீறியுள்ளதாக திமுக புகார் கூறியுள்ளது. இதனால் தேர்தல் மேலும் தாமதமாகும் என தெரிகிறது !

அன்பான வாசகர்களே!

தரமான செய்திகளையும் சிந்தனைகளையும் வழங்குவதற்காக இந்த வலைப்பக்கத்தை  (  namathu seythi) தொடங்கியுள்ளேன். உங்கள் செய்தி ( Ungal seythi ) எனும் பெயரில் உள்ள பிளாக்ஸ்பாட் பக்கமும் பிரபலமாகிவருகிறது ! நமது செய்தி எனும் பெயரில் முகநூலில் தொடர்ந்து தலைப்பு செய்திகளை வழங்கி வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். -ஜே.மீராமைதீன் ஆசிரியர்