இலங்கையை தொடர்ந்து திவாலாகும் மேலும் பல நாடுகள்!
இலங்கையைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் திவாலாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.உக்ரயின் போருக்குப் பிறகு பண வீக்கம், நிதிநிலை வீழ்ச்சி, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இலங்கைக்கு பிறகு திவாலாகும் நிலையில் எகிப்து உள்ளது. உக்ரயின் நாட்டில் இருந்து மானிய விலையில் கோதுமை பெற்று வந்த எகிப்து, போரின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படுட்டுள்ளது. அடுத்து, துனிசியா, லெபனான், துருக்கி ஆகிய நாடுகளும் வெளிநாட்டு கடனால் விழிபிதுங்கி நிற்பதாக தெரியவந்துள்ளது. மேலும் அர்ஜெண்டினா, எல் சால்வடார், பெரு போன்ற நாடுகளும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. லெபனான் நாடும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய்க்காக உக்ரயின் நாட்டை நம்பி உள்ளது. ரஷ்யாவின் அடாவடி போரினால் மனித உயிர்கள் மடிவதுடன் உலகின் பல நாடுகள் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது! எனவே போருக்கு எதிராக மனிதகுலம் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும்! - மீராப்பிரியன்