நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களைப் பழி வாங்கும் போக்கில் பிஜேபி ஒன்றிய அரசு செயல்படுவதாக நாடு முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் இன்று போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று அமலாக்கத் துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தனது உடல்நிலை காரணமாக விசாரணையை சோனியா காந்தி தள்ளிப்போடக் கோரியும் பிடிவாதமாக இதனைச் செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற பிஜேபி ஒன்றிய அரசின் போக்கை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கில் பிஜேபி அரசு செயல்படுவதற்கு அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Comments