நூல் அறிமுகம்: ஸ்பெயினில் இஸ்லாம்!

கி.பி. 712லிருந்து கி.பி. 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது. அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமிய பண்பாட்டிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமிய பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதார பாதுகாப்புத் திட்டம் ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிற்கின்றது. ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன ஆனது? 780 ஆண்டு ஆட்சி செலுத்திய மண்ணில் ஆட்சி செலுத்திய மார்க்கத்தை சார்ந்தவர்கள் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இது எப்படி ஆனது? என்பதை அற்புதமான நடை, உள்ளத்தை கவர்ந்திழுக்கும் வாசக அமைப்பு, வார்த்தை நயங்களில் மௌலவி ஹாபிழ் எஸ். ஏ. காஜா நிஜாமுதீன் யூஸுஃபி அவர்கள் ஆய்வு செய்து வகுத்து தொகுத்துத் தந்துள்ளார். இது அனைவரும் படித்து படிப்பினை பெறக்கூடிய சிறந்த நூலாகும். *ஸ்பெயினில் இஸ்லாம்* * ஆசிரியர் : மௌலவி ஹாஃபிழ் எஸ்.ஏ. காஜா நிஜாமுதீன் யூசுஃபி * விலை : ரூ. 130 * வெளியீடு : இலக்கியச்சோலை 9962918724

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!