கன்னியாகுமரி நோக்கி நடைபயணம் : ஆம் ஆத்மீ வசீகரன் தொடங்கினார்!
திருச்சி: ஆம்ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் நேற்று (பிப்ரவரி 5ம் தேதி) மக்களை நோக்கிய நடைபயணம் தொடங்கினார்.
மேக் இந்தியா No 1 என்ற கெஜ்ரிவாலின் முழக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலையருகில் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை செல்கிறது.
பின்னர் தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த நடைபயணம் தொடருகிறது.
கடந்த 2020ல் முதல்கட்ட நடைபயணம் சென்னையில் துவங்கி திருச்சியில் முடிவடைந்தது. இந்த நடைபயணம் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், அரசியல் சாசன சட்ட பாதுகாப்பு வலியுறுத்தி வசீகரன் தலைமையில் நடைபெற்றது.
2022 நடைபயணத்தின் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று திருச்சியில் தொடங்கியது.
டெல்லி மாநில ஆம்ஆத்மி கட்சி அரசின் சாதனைகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மக்களின் அடிப்படை தேவைகளை வழங்கி வரும் கெஜ்ரிவால் ஆட்சியின் சாதனைகளை விளக்கவும்
2024 மக்களவை தேர்தலில் மக்கள் விரோத பாஜக ஆட்சியை ஆகற்றி - உண்மையான ஜனநாயக ஆட்சியை - நேர்மையான ஆட்சியை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் அமைத்தது போல் இந்திய அளவில் 2024ல் உருவாக்கிட வலியுறுத்தியும் மக்களை நோக்கி இந்த நடைபயணம் மேற்கொள்கிறார்.
கிட்டத்திட்ட 500 கி. மீ. தூரம் 15 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.

Comments
Post a Comment