ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!

நான் பாடும் பாடல் எனும் திரைப்படம் ராஜ் தொலைக்காட்சியில் பார்த்தேன். எழுத்து - இயக்கம்: ஆர். சுந்தர்ராஜன். இசை: இளையராஜா. இப்படத்தில் சிவக்குமார், மோகன், பாண்டியன், சரத்பாபு, அம்பிகா, இளவரசி, நளினி என நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது! சிவக்குமார் ஒரு எழுத்தாளராக - நாவலாசிரியராக நடித்திருப்பது சிறப்பு! மோகன் ஒரு மருத்துவராக வந்து விபத்தில் மரணம் அடைகிறார். அவரது மனைவி அம்பிகா ஒரு பாடகி! விதவை ஆகிறார். சிவக்குமாரின் கதைகளுக்கு அம்பிகா நல்ல ரசிகை - வாசகி! ஏற்கனவே விதவையான நளினிக்கு சரத்பாபு வாழ்க்கை கொடுக்கிறார். அதேபோல், " ( உங்கள் கதையின் ) விதவைக்கு வாழ்க்கை கொடுங்க " என்று அம்பிகா கேட்கிறார். கதாநாயகிக்கு மட்டுமல்ல - நிஜ நாயகிக்கும் கதாசிரியர் சிவக்குமார்
வாழ்க்கை கொடுக்க தயாராக இருந்தபோதும் அதனை அவள் ஏற்கவில்லை. மறைந்த கணவனின் நினைவாக வாழும் கதாநாயகியின் பத்தினித்தனத்தை கதாசிரியர் புகழ்வதோடு படம் முடிகிறது. இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்து மன நிறைவு அளிக்காத ஒரு திரைப்படம் எடுத்திருப்பதாகவே தெரிகிறது! பாடவா உன் பாடலை, சீர் கொண்டு வா வெண் மேகமே போன்ற நேயர் விருப்பப் பாடல்கள் இருப்பது ஒரு ஆறுதல்! ***- மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!