பாசிசத்தைப் புரிந்து கொள்வோம்!

எம்பி பதவியைப் பறித்து இந்தியாவின் பெரும் இயக்கமான காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியையே முடக்கும் அளவுக்கு பாசிசவாதிகள் சதி செய்து வருகிறார்கள்.
இப்போதாவது புரிகிறதா ? பாசிச ஆர். எஸ். எஸ்.சும், பா.ஜ.க.வும், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரி அல்ல , அது மனித குலத்திற்கும் சமத்துவம், ஜனநாயகம்,சமநீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை என எல்லாவற்றிற்கும் எதிரானதுதான் என்று...! முஸ்லிம் சமூகம் குறிவைத்து ஒடுக்கப்படும்போது பாராமுகமாக கடந்துபோனவர்களே, இப்போது தெரிகிறதா ? வலியும் வேதனையும் என்னவென்று ? ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எவ்வளவு சர்வ சாதாரணமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு மதசார்பற்ற மண்ணில் மதவெறி எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது? யாருக்கோதானே நடக்கிறது, நமக்கென்ன என இருந்ததின் விளைவு இப்போது ஊருக்கே என மாறும்போது வலிக்கிறதல்லவா ? செய்யவேண்டிய நேரத்தில் செய்யவேண்டியதை செய்யத் தவறியவர்களால் இன்று அவர்கள் தலையிலேயே இடி விழுகிறது. இனியேனும் விழித்துக்கொண்டால் அனைவருக்கும் நன்று என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை! * - அச.உமர் பாரூக்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!