வேளாண்மை தொடர்பான 3 சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிவித்துள்ளார். இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என்று பிடிவாதமாக கூறிவந்த பிரதமர் மோடி, இன்று (19 நவம்பர் 2021) திடீர் என அவற்றை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் உ.பி.சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சி இந்த முடிவு எடுத்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
Posts
- Get link
- X
- Other Apps
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெற்றோர் அனுமதியின்றி எரியூட்டப்பட்டுள்ளார் ! குற்றவாளிகளில் பூசாரியும் ஒருவர். வன்கொடுமை, பாலியல் குற்றம் முதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியான அந்த சிறுமியின் பெற்றோருக்கு நீதி கிடைக்குமா ?
- Get link
- X
- Other Apps
ஒரு வார காலத்துக்கு கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் நீட்டிப்பு செய்யப்பட்டதோடு சென்னை ரங்கநாதன் தெரு கடைகள் மூடப்பட்டது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. வியாபாரிகளும் ஜவுளிக்கடை ஊழியர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள். ஏற்கனவே பல மாதங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் முடக்கும் ஊரடங்கை அமல்படுத்துவது சரியில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து !
உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் !
- Get link
- X
- Other Apps
உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்துக்குப் பிறகு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டும் அது ரத்து செய்யப்பட்டது. 1) வார்டு வரையறை 2) இட ஒதுக்கீடு 3) 9 மாவட்டங்கள் பிரிப்பு முதலான பிரச்சினைகளை தி.மு.க. எழுப்பி நீதிமன்றத்தை அணுகியதால் புதிய அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டும் சிக்கல் நீடிக்கிறது. மீண்டும் திமுக உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தேர்தல் ஆணையம் மீறியுள்ளதாக திமுக புகார் கூறியுள்ளது. இதனால் தேர்தல் மேலும் தாமதமாகும் என தெரிகிறது !
அன்பான வாசகர்களே!
- Get link
- X
- Other Apps
தரமான செய்திகளையும் சிந்தனைகளையும் வழங்குவதற்காக இந்த வலைப்பக்கத்தை ( namathu seythi) தொடங்கியுள்ளேன். உங்கள் செய்தி ( Ungal seythi ) எனும் பெயரில் உள்ள பிளாக்ஸ்பாட் பக்கமும் பிரபலமாகிவருகிறது ! நமது செய்தி எனும் பெயரில் முகநூலில் தொடர்ந்து தலைப்பு செய்திகளை வழங்கி வருகிறேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். -ஜே.மீராமைதீன் ஆசிரியர்