Posts

ஒன்றிய அரசின் பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து பொது துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். எல். ஐ. சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என ஒன்றிய- மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசுத் துறை ஊழியர் சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை காவித் துண்டு அணிந்த குண்டர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்களையும் அச்சுறுத்தினர்!
தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திருத்த மசோதா எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 55 பேரையும் படகுகளையும் விடுதலை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
வேளாண்மை தொடர்பான 3 சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவிவித்துள்ளார். இந்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என்று பிடிவாதமாக கூறிவந்த பிரதமர் மோடி, இன்று (19 நவம்பர் 2021) திடீர் என அவற்றை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். வரும் உ.பி.சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று அஞ்சி இந்த முடிவு எடுத்து இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு! 20 பேர் பலி - பலர் படுகாயம்! அந்நிய சக்திகள் சதியா என சந்தேகம்.
 டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெற்றோர் அனுமதியின்றி எரியூட்டப்பட்டுள்ளார் !  குற்றவாளிகளில் பூசாரியும் ஒருவர். வன்கொடுமை,  பாலியல் குற்றம் முதலான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியான அந்த சிறுமியின் பெற்றோருக்கு நீதி கிடைக்குமா ?