Posts

தென்காசியில் அரசுப் பணி தேர்வுக்கான பயிற்சி : மாணவர்களுக்கு வக்பு வாரிய ஆலோசனை கூட்டம்!

Image
தென்காசி சொர்ணபுரம் ஜமாஅத் சார்பில் வக்பு வாரியம் ஏற்பாடு செய்துள்ள அரசு பணியாளர்கள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்க்கை தொடர்பாக மாணவர்கள் - பெற்றோர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உ. பி. யை விட 5 மடங்கு வரி செலுத்தும் தமிழ்நாடு!

Image

படித்ததில் பிடித்தது!

Image
சோமாலியாவில் புகழ் பெற்று வரும் யூடியூபர் பைஸா சமாரா பற்றிய சுவையான தகவல்! நன்றி: குங்குமம்

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!

Image
நான் பாடும் பாடல் எனும் திரைப்படம் ராஜ் தொலைக்காட்சியில் பார்த்தேன். எழுத்து - இயக்கம்: ஆர். சுந்தர்ராஜன். இசை: இளையராஜா. இப்படத்தில் சிவக்குமார், மோகன், பாண்டியன், சரத்பாபு, அம்பிகா, இளவரசி, நளினி என நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது! சிவக்குமார் ஒரு எழுத்தாளராக - நாவலாசிரியராக நடித்திருப்பது சிறப்பு! மோகன் ஒரு மருத்துவராக வந்து விபத்தில் மரணம் அடைகிறார். அவரது மனைவி அம்பிகா ஒரு பாடகி! விதவை ஆகிறார். சிவக்குமாரின் கதைகளுக்கு அம்பிகா நல்ல ரசிகை - வாசகி! ஏற்கனவே விதவையான நளினிக்கு சரத்பாபு வாழ்க்கை கொடுக்கிறார். அதேபோல், " ( உங்கள் கதையின் ) விதவைக்கு வாழ்க்கை கொடுங்க " என்று அம்பிகா கேட்கிறார். கதாநாயகிக்கு மட்டுமல்ல - நிஜ நாயகிக்கும் கதாசிரியர் சிவக்குமார் வாழ்க்கை கொடுக்க தயாராக இருந்தபோதும் அதனை அவள் ஏற்கவில்லை. மறைந்த கணவனின் நினைவாக வாழும் கதாநாயகியின் பத்தினித்தனத்தை கதாசிரியர் புகழ்வதோடு படம் முடிகிறது. இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்து மன நிறைவு அளிக்காத ஒரு திரைப்படம் எடுத்திருப்பதாகவே தெரிகிறது! பாடவா உன் பாடலை, சீர் கொண்டு வா வெண் மேகமே போன்ற நேயர் விருப்பப் பாடல்கள...

வேலைவாய்ப்பு செய்திகள்!

Image
இந்திய புவி ஆய்வு மையத்தில் ஒட்டுநர் பணி! தகவல்: ஜமால் முஹம்மது

குஜராத் பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Image

நபிகள் நாயகம் பற்றி அவதூறு: தெலுங்கானா பிஜேபி எம். எல். ஏ. கைது !

Image
ஹைதராபாத்: அவதூறு பேசிய பிஜேபி எம். எல். ஏ. அதிரடியாக கைது செய்யப்பட்டார். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி அவதூறாக தெலுங்கானா பிஜேபி எம்.எல்.ஏ. ராஜாசிங் பேசினார். இது குறித்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை பிஜேபியிலிருந்து தலைமை நீக்கியுள்ளது. மேலும் அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கட்சியின் தேசிய கொள்கைப் பரப்பு செயலாளர் நுபூர் சர்மா என்ற பெண், உலக மக்கள் இறைத்தூதர் என்று போற்றும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி கேவலமாக விமர்சனம் செய்தார். அவரை ஆதரித்து இந்த எம்.எல்.ஏ. பேசியதாக கூறப்படுகிறது. எனவே நுபூர் சர்மாவையும் அவரை ஆதரித்துப் பேசி அவதூறு செய்வோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.