நபிகள் நாயகம் பற்றி அவதூறு: தெலுங்கானா பிஜேபி எம். எல். ஏ. கைது !

ஹைதராபாத்: அவதூறு பேசிய பிஜேபி எம். எல். ஏ. அதிரடியாக கைது செய்யப்பட்டார். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி அவதூறாக தெலுங்கானா பிஜேபி எம்.எல்.ஏ. ராஜாசிங் பேசினார். இது குறித்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை பிஜேபியிலிருந்து தலைமை நீக்கியுள்ளது. மேலும் அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கட்சியின் தேசிய கொள்கைப் பரப்பு செயலாளர் நுபூர் சர்மா என்ற பெண், உலக மக்கள் இறைத்தூதர் என்று போற்றும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி கேவலமாக விமர்சனம் செய்தார். அவரை ஆதரித்து இந்த எம்.எல்.ஏ. பேசியதாக கூறப்படுகிறது. எனவே நுபூர் சர்மாவையும் அவரை ஆதரித்துப் பேசி அவதூறு செய்வோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!