உ. பி. யில் மனித உரிமை மீறல்: உச்ச நீதிமன்றத்திற்கு முன்னாள் நீதிபதிகள் கோரிக்கை!
உ. பி. யில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது பிஜேபியின் யோகி ஆதித்யநாத் அரசு வன்முறையை ஏவி அடக்கி ஒடுக்கும் போக்கை முன்னாள் நீதிபதிகள் கண்டித்து, இதனை உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
அங்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி சிறுபான்மை முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது போன்ற அடிப்படை மனித உரிமை மீறல்களை நிகழ்த்துவது குறித்து 12 முன்னாள் உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Comments
Post a Comment