அக்கினிப் பாதை திட்டம் தேவை இல்லை! -பிரியங்கா காந்தி
புதுடெல்லி: அக்கினிப் பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தேர்வு முடிவுகளை வெளியிட்டு விமானப் படைக்கான நிறுத்தப்பட்ட நியமனப் பணிகளை தொடங்குங்கள். ராணுவ ஆள் சேர்ப்பை முன்பு போல் தொடருங்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பீகார், உ. பி. முதலான மாநிலங்களில் ரயில்கள் - வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் இன்று போர் நினைவுச் சின்னம் அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாங்கள் ராணுவ தேர்வு எழுதிப் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த புது அறிவிப்பினால் ராணுவத்தில் சேரும் எங்கள் கனவு கேள்விக்குறி ஆக்கியுள்ளது என்று தெரிவித்தனர்.
( 18 - 6 - 2022 )
Comments
Post a Comment