நபிகள் நாயகம் பற்றி பிஜேபி அவதூறு : உலக நாடுகள் கண்டனம்!

நபிகள் நாயகம் முஹம்மது ( ஸல் ) பற்றி பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, தொலைக்காட்சியில் இழிவுப்படுத்தி பேசியது குறித்து உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது. நவீன் குமார் என்பவர் அதனைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். இதனை கண்டித்து உ. பி. யில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியபோது, கலவரம் ஏற்படுத்தப்பட்டது. போராட்டம் நடத்தியோர் வீடுகளை இடிப்போம் என்று உ. பி. அரசு மிரட்டியுள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய நபர்கள் குறித்து முதலில் ஏமன் கண்டனம் தெரிவித்துள்ளது. பின்னர் கத்தர், குவைத் நாடுகள் இந்திய தூதர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பின. அரபு ஒத்துழைப்பு நாடுகள், பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பிஜேபி அரசின் மதவாதப் போக்கினால் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுட்டுள்ளது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மதத் தலைவர்களை இழிவாகப் பேசுவதை பிஜேபி அனுமதிக்காது என்றும் இந்தியாவில் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்றும் பிஜேபி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவதூறு பேசிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!