மக்கள் நல பணியாளர் பணி நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
கிராமங்களில் பணியாற்றிய 18 ஆயிரத்து 500 மக்கள் நலப்பணியாளர்கள் 2011ல் ஜெயலலிதா ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க, திமுக அளித்த வாக்குறுதிப்படி முதல்வர் மு. க. ஸ்டாலின் இப்போது ஏற்பாடு செய்து வருகிறார்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணியில் ரூ.7500 சம்பளத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த புதிய திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், மக்கள் நல பணியாளர்கள் விரும்பினால், அரசின் புதிய கொள்கையை ஏற்று பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். விரும்பாதவர்கள் கோரிக்கைகளை முன் வைத்து தனியாக நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
Comments
Post a Comment