மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி!
மும்பை: மகாராஷ்டிராவின் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். இதனால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. சிவசேனா தலைவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சமாதான முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் பின்னணியில் பிஜேபி செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை உடைக்க அதிருப்தி எம். எல். ஏ. க்கள் மூலம் சதி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் சிவசேனா - பிஜேபி மோதல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment