அமீரகம் சென்று திரும்பினார் பிரதமர் மோடி!
அபுதாபி: ஜெர்மனியில் ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமீரக அதிபர் ஷேக் முஹம்மது பின் சையது நஹ்யானை சந்தித்து முன்னாள் அதிபர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்தியாவில் பிஜேபி நிர்வாகிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதால், அரபு நாடுகள் உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின.
இதற்கு பதிலாக, அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அவதூறு கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு துறை விளக்கம் தெரிவித்தது.
இப்போது அமீரகம் சென்ற பிரதமர் மோடியிடம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல், நபிகள் நாயகம் பற்றிய அவதூறு போன்றவை இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
Comments
Post a Comment