எதற்கு சோதனைகள்?
ராணுவம் நாட்டைக் காக்க...
போலீஸ் மாநில மக்களைக் காக்க...
சி. பி. ஐ. சிறப்பு வழக்குகளை விசாரிக்க...
ஐ. என். ஏ. என்பது யாருக்காக?
அப்பாவி சிறுபான்மை மக்கள் - குறிப்பாக முஸ்லிம்களை குறி வைத்து விசாரணை செய்வதும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதும் மனித உரிமை மீறல் ஆகும். இந்தியா குறித்து வெளிநாடுகளில் - குறிப்பாக அரபு நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் - வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாய நிலையில் - தமிழகத்தில் சில முஸ்லிம்களின் வீடுகளில் ஐ. என். ஏ. சோதனை செய்துள்ளது ஒன்றிய பிஜேபி அரசு திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம. ம. க., வி. சி. க. ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். திமுக திராவிட முன்மாதிரி ஆட்சி சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments
Post a Comment