44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி : 7 மாநில முதல்வர்கள் வாழ்த்து!

சென்னை: 44 வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். போட்டிகள் நாளை முதல் மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 187 நாடுகளில் இருந்து 2500 சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழகத்தின் பெருமை கூறும் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் சதுரங்க ஒலிம்பியாட் சிறப்பு இசை காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டியின் ஒலிம்பியாட் தீபம் ஒப்படைப்பு போன்ற வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால் சென்னை - மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாமல்லபுரம் பகுதியில் பாஸ் இல்லாமல் யாரும் வர அனுமதி இல்லை என்று காவல் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்து, பல்லவ மன்னன் ஆண்ட தமிழ் மண்ணில் இந்த போட்டி நடைபெறுவது பெருமை வாய்ந்தது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 7 மாநிலங்களின் முதல்வர்களும் இந்த போட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!