மாணவி மர்ம மரணம்: வன்முறை - தீவைப்பு! 100 பேர் கைது!
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் அருகே கனியாமூர் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை - பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு நடைபெற்றது.
கல்வீச்சில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு-பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேரும் வன்முறையில் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து டி. ஐ. ஜி. சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பேட்டி அளித்துள்ளனர்.
மாணவி மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Comments
Post a Comment