தியாகத் திருநாள் கொண்டாட்டம்!
சென்னை: தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள் கொண்டாடினர். பல்வேறு நகரங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. லட்சக் கணக்கான முஸ்லிம்கள் அதில் கலந்துகொண்டு உலக அமைதிக்காகவும் கொரோனா உள்ளிட்ட நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பிரார்த்தனை புரிந்தனர். ஆடுகள் முதலான பிராணிகளை குர்பானி கொடுத்து உறவினர், ஏழைகளுக்கு பங்கு வைத்து விநியோகம் செய்தனர். இனிப்பு மற்றும் பிரியாணி செய்து மற்ற சமுதாய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விருந்தளித்தனர்.
முன்னதாக, குடியரசு தலைவர் ராம்னாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் முனைவர் சேமுமு முகமதலி மற்றும் பிரமுகர்கள் ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments
Post a Comment