அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது!
சென்னை: ஒருபக்கம் முக்கிய திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது, இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகம் இன்று பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நுழைந்தார். அவர் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஓ.பி.எஸ். மற்றும் தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வருவாய் கோட்ட அலுவலரால் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது!
இது குறித்து இ. பி. எஸ்., ஓ. பி. எஸ். இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று 'சீல்' வைக்கப்பட்ட அலுவலகத்தை திறக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment