கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை!

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் குறித்து மறு பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட
பிரேத பரிசோதனையில் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருந்தால், எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும். பிரேத பரிசோதனையில் அது தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது. மர்ம உறுப்பு, ஆசனவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பின் தலையில் காயம், உடலில் பல இடங்களில் சிராய்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தற்கொலை அல்ல, கொலை என்று மாணவியின் பெற்றோர் கூறுகிறார்கள். பள்ளி தாளாளரின் மகன்கள், தம்பி ஆகியோர் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பதால் புதிய பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த பரிசோதனையிலாவது உண்மை தெரிய வருமா? துப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!