குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்!
புதுடெல்லி: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருப்பேன் என்று பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்தார்.
விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment