திருவள்ளூர்: தற்கொலை செய்த பள்ளி மாணவிக்கு உடற்கூறாய்வு !
திருவள்ளூர்: மப்பேடு அருகே கீழச்சேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் + 2 படித்து வந்த மாணவி தங்கியிருந்த விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த திடீர் மரணம் தொடர்பாக, பெற்றோரும் உறவினரும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாறியது.
மரணம் அடைந்த மாணவிக்கு அவரது அண்ணன் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவியின் திடீர் மரணம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment