மர்ம மரணம் அடைந்த மாணவிக்கு இறுதி அஞ்சலி!
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, விடுதியில் மர்ம மரணம் அடைந்ததை தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. இந்த வழக்கை சி. பி. சி. ஐ. டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி 2 உடற்கூறாய்வு செய்யப்பட்டு, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன், எம். எல். ஏ. க்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெற்றோரும் உறவினரும் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
மாணவியின் அகால மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Comments
Post a Comment