முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு லட்சணம் இது தானா?
சென்னை: வேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுவதும் இருக்கிறது. தமிழகத்தில் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். முன்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்தவர்களுக்கு வேலை கிடைத்தது. இப்போது அந்த நிலை இல்லை. எல்லா வகை அரசுப் பணிகளுக்கும் டி. என். பி. எஸ். சி. உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.
இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு தான்! அப்படியே அவர்கள் வெற்றி பெற்றாலும் இடஒதுக்கீடு அடிப்படையில் எப்படி வேலை வழங்கப்படுகிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. இந்த நிலையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு துறையில் எப்படி அமலாக்கப்படுகிறது? எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது.
எனவே நேரடி நியமனங்களும் செய்யப்பட வேண்டும். வக்பு வாரியம் போன்ற துறைகளில் முஸ்லிகளுக்கு நேரடியாக வேலை வழங்க வேண்டும்.
வக்பு வாரிய தலைவராக அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் பொறுப்பு
ஏற்ற பிறகு இளநிலை உதவியாளர் பணிக்கு 27 பேர் தேவை என்று 13-8-2021 அன்று பொது விளம்பரம் செய்து 5000 விண்ணப்பங்கள் பெற்றும் அதற்கான தேர்வு நடத்த விடாமல் உயர் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வை பல முறை தள்ளிப் போட்டு இப்போது டி. என். பி. எஸ். சி. மூலம் தான் எந்தப் பணிக்கும் தேர்வு நடத்த வேண்டும் என்று புது உத்தரவு போட்டுள்ளனர். தேர்வுக்காக விண்ணப்பத்துடன் கட்டிய தலா ரூ.300 கட்டணம் திருப்பித் தரப்படும் என்று வக்பு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் தொடர்பான துறையில் கூட அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கும் லட்சணம் இது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments
Post a Comment