கோவை மாணவர் சித்தேஷ் யோகாவில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இன்று கலைஞர் தொலைக்காட்சியில் அவர் செய்த ஆசனங்கள் வியக்க வைத்தன! நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் மனோபாலா பங்கேற்றுப் பாராட்டினார்.
கணவன் - மனைவி இருவருக்கும் வாழ்வில் புரிதல் வேண்டும். கணவன் சொல்வதை மனைவியும் மனைவி சொல்வதை கணவனும் காது கொடுத்து கேட்க வேண்டும்.இந்த காணொலியைக் காணுங்கள்!
மதவெறியர்களை தூக்கி எறிந்த கர்நாடக மக்களுக்கு நன்றி...! வெற்றி வாகை சூடிய காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்...! ஆபரேஷன் லோட்டஸ் எனும் அயோக்கியத்தனத்திற்குள் சிக்கிவிடாமல் இருக்க பெரும் பதற்றத்தில் காங்கிரஸ் தலைவர்களின் நிலை...! கிங் மேக்கர் என கருதப்பட்ட குமாரசாமியின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபம்...! முதல்வராக சித்தும்,சிவமும் சண்டையிடாமல் தவிர்ப்பது நன்று...! மொத்தத்தில் பாசிசம் வீழ்ந்துள்ளது. காங்கிரஸ் எழுந்துள்ளது! இனி தக்கவைப்பது காங்கிரஸ் கையில்தான். மீண்டும் ! - அச.உமர் பாரூக்
மணிப்பூரில் இரு பழங்குடி பெண்கள் சாலையில் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment