நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆனார்!

பாட்னா: பீகார் மாநில முதல்வராக 8வது முறையாக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். முன்னதாக பிஜேபி கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் முறைப்படி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூட்டணி சார்பாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் முதல்வராக நிதிஷ்குமார் முதல்வர் பதவியும் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியும் ஏற்றனர். ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!