மாடுகளுக்கு சுதந்திரம்!
குஜராத் மாநிலத்தில் மெஹசானா மாவட்டத்தில் நடந்த தேசியக் கொடி ஊர்வலத்தில் மாடுகள் புகுந்ததால் முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் காயம் அடைந்தார்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் திடீரென மாடுகள் புகுந்தன. இதனால் கூட்டத்தில் பலர் காயம் அடைந்தனர். அதில் முன்னாள் துணை முதல்வரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுதந்திரதினத்தை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் மாடுகளும் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
Comments
Post a Comment