ஊடகப் பார்வை: வீட்ல விசேஷம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வீட்ல விசேஷம் படம் ஒளிபரப்பானது. மக்களிடம் பொதுவாக, தம்பதிகள் இந்த வயதில் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற மூட நம்பிக்கை உள்ளது. அதனை உடைக்க இந்தப் படத்தின் கதை முயன்றுள்ளது. இந்திப் படத்தின் மறு ஆக்கமாக வீட்ல விசேஷம் தமிழில் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜி.சரவணன் இயக்கியுள்ளனர். வயதான தம்பதிகளாக சத்யராஜ் - ஊர்வசி இணை நடித்து, அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இருந்தாலும் சத்யராஜின் நக்கலும் நையாண்டியும் குறையவில்லை! வயதான காலத்தில் ஊர்வசி கர்ப்பிணியானதை தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் - அம்மாவிடம் சொல்ல சத்யராஜ் தவிக்கும் தவிப்பு - தயக்கம் ரசிக்கும்படி உள்ளது. மகனாக நடிக்கும் ஆர். ஜே. பாலாஜி தனது பெற்றோர் பற்றி அதிருப்தி இருந்தாலும், காதலி அபர்ணாவின் தாயார் தவறாக விமர்சனம் செய்ததும் கொதித்து பதிலடி கொடுப்பது அருமை! 60 வயதில் என் தந்தையும் தாயும் காதலுடன் வாழ்வதில் என்ன தவறு என்று கேட்கிறார். வயிற்று வலி வந்து, கத்தி படாமல் சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்று முயல்வதும்- அந்த நேரத்தில் கணவனை வேதனையில் ஆம்பள தடியா என்று திட்டுவதும் ஊர்வசி நடிப்பில் முத்திரை பதிக்கிறார்! கணவன் - மனைவி பாசம் உருக்கம்! படம் முழுக்க தூவப்பட்டுள்ள நகைச்சுவை ஆறுதல்! ***மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!