விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து! காமன்வெல்த்: இந்தியா தங்கம் குவிப்பு!
பன்னாட்டு சதுரங்க அமைப்பின் துணை தலைவராக தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
** காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
*** குத்துச் சண்டையில் இந்திய வீராங்கணைகள் நீத்து, நிகாத் ஜரின் இருவரும் தங்கப்பதக்கம்
வென்றுள்ளனர் (படம்).
ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் 26 வயதேயான இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தின் மெக்டொனால்டை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தடகளத்தில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்தன. மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கம் வென்றார். கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப்குமார் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

Comments
Post a Comment