பிரபல மார்க்க அறிஞர் - எழுத்தாளர் - சமூக சேவகர் மவ்லவி கலீல் அஹமது பாகவிக்கு இந்திய அரசின் இணைய தளம் ' மாற்றத்தை உருவாக்குபவர் ' ( சேஞ் மேக்கர் ) பிளாட்டின பதக்கம் வழங்கியுள்ளது.
எனது அரசு ( mygov.) என்ற இணைய தளத்தை தொடர்ந்து பயன்படுத்தி
இந்த பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
கணவன் - மனைவி இருவருக்கும் வாழ்வில் புரிதல் வேண்டும். கணவன் சொல்வதை மனைவியும் மனைவி சொல்வதை கணவனும் காது கொடுத்து கேட்க வேண்டும்.இந்த காணொலியைக் காணுங்கள்!
எம்பி பதவியைப் பறித்து இந்தியாவின் பெரும் இயக்கமான காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியையே முடக்கும் அளவுக்கு பாசிசவாதிகள் சதி செய்து வருகிறார்கள். இப்போதாவது புரிகிறதா ? பாசிச ஆர். எஸ். எஸ்.சும், பா.ஜ.க.வும், முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரி அல்ல , அது மனித குலத்திற்கும் சமத்துவம், ஜனநாயகம்,சமநீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை என எல்லாவற்றிற்கும் எதிரானதுதான் என்று...! முஸ்லிம் சமூகம் குறிவைத்து ஒடுக்கப்படும்போது பாராமுகமாக கடந்துபோனவர்களே, இப்போது தெரிகிறதா ? வலியும் வேதனையும் என்னவென்று ? ஒரு மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எவ்வளவு சர்வ சாதாரணமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு மதசார்பற்ற மண்ணில் மதவெறி எந்த அளவிற்கு தலைவிரித்தாடுகிறது? யாருக்கோதானே நடக்கிறது, நமக்கென்ன என இருந்ததின் விளைவு இப்போது ஊருக்கே என மாறும்போது வலிக்கிறதல்லவா ? செய்யவேண்டிய நேரத்தில் செய்யவேண்டியதை செய்யத் தவறியவர்களால் இன்று அவர்கள் தலையிலேயே இடி விழுகிறது. இனியேனும் விழித்துக்கொண்டால் அனைவருக்கும் நன்று என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை! * - அச.உமர் பாரூக்
நான் பாடும் பாடல் எனும் திரைப்படம் ராஜ் தொலைக்காட்சியில் பார்த்தேன். எழுத்து - இயக்கம்: ஆர். சுந்தர்ராஜன். இசை: இளையராஜா. இப்படத்தில் சிவக்குமார், மோகன், பாண்டியன், சரத்பாபு, அம்பிகா, இளவரசி, நளினி என நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது! சிவக்குமார் ஒரு எழுத்தாளராக - நாவலாசிரியராக நடித்திருப்பது சிறப்பு! மோகன் ஒரு மருத்துவராக வந்து விபத்தில் மரணம் அடைகிறார். அவரது மனைவி அம்பிகா ஒரு பாடகி! விதவை ஆகிறார். சிவக்குமாரின் கதைகளுக்கு அம்பிகா நல்ல ரசிகை - வாசகி! ஏற்கனவே விதவையான நளினிக்கு சரத்பாபு வாழ்க்கை கொடுக்கிறார். அதேபோல், " ( உங்கள் கதையின் ) விதவைக்கு வாழ்க்கை கொடுங்க " என்று அம்பிகா கேட்கிறார். கதாநாயகிக்கு மட்டுமல்ல - நிஜ நாயகிக்கும் கதாசிரியர் சிவக்குமார் வாழ்க்கை கொடுக்க தயாராக இருந்தபோதும் அதனை அவள் ஏற்கவில்லை. மறைந்த கணவனின் நினைவாக வாழும் கதாநாயகியின் பத்தினித்தனத்தை கதாசிரியர் புகழ்வதோடு படம் முடிகிறது. இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்து மன நிறைவு அளிக்காத ஒரு திரைப்படம் எடுத்திருப்பதாகவே தெரிகிறது! பாடவா உன் பாடலை, சீர் கொண்டு வா வெண் மேகமே போன்ற நேயர் விருப்பப் பாடல்கள...
Comments
Post a Comment