வெள்ள நிவாரண முகாமில் உள்ள மக்களுடன் முதல்வர் விசாரிப்பு!
சென்னை: வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பற்றி மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களிடம் முதல்வர் மு. க. ஸ்டாலின் விசாரித்து அறிந்தார்.
உபரி நீர் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவேரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு குறித்து செல்பேசி தகவல் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள்
செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment