நிதிஷ்குமார் பிஜேபி கூட்டணியிலிருந்து விலகுகிறார் !
பாட்னா : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். பிஜேபி கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கட்சியினருடன் விவாதித்து வருகிறார்.
இதற்காக தனது ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம். பி., எம். எல். ஏ. க்கள் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை நடத்தினார்.
கடந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் பிஜேபியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, அந்தக் கட்சி ஆதரவுடன் முதல்வர் ஆனார். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.
தனது கட்சியின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அதிகாரம் - பண பலத்தைக் காட்டி பிஜேபிக்கு அழைப்பதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒன்றிய அமைச்சரவையில் தனது கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பிரதமர் மோடி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
நிதிஷ்குமாரின் புதிய முடிவுக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment