திராவிட முன்மாதிரி ஆட்சியில் சிறு குறு நடுத்தர தொழில்கள் முன்னேற்றம்! - முதல்வர்
சென்னை: நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் காப்பகங்கள் கண்காட்சி - கருத்தரங்கம் நடைபெற்றது. சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் தலைமை தாங்கினார். முதல்வர் மு. க. ஸ்டாலின் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, திமுகவின் திராவிட முன்மாதிரி ஆட்சியில் தமிழகத்தில் சிறு குறு நடுத்தர தொழில்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. தொழில் தொடங்க எளிதான மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 14 வது இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று குறிப்பிட்டார்.

Comments
Post a Comment