நீட் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிப்பில் சேரலாம்?
இந்த வருடம் நீட் தேர்வில் 470 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ படிப்பில் ஏதெனும் ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளது.
நீட் தேர்வில் 470-க்கு கீழ் எடுத்தவர்களை குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் என கருதலாம், அவர்களுக்கு அடுத்து என்ன என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்ப்போம்.
* நீங்கள் அரசு பள்ளி மாணவராக இருந்தால், நீட் தேர்வில் 250-க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருந்தால் அரசு கவுன்சிலிங் மூலம் எம். பி. பி. எஸ். கிடைக்க வாய்ப்புள்ளது, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது.
* வாய்ப்பு 1 : அரசு நடத்தும் சித்தா, ஆயுர்வேதா கவுன்சிலிங் மூலம் தனியார் கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கான இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் ரூ.1,25,000. அரசு சித்தா, ஆயுர்வேதா ஹோமியோபதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு. ஆனால் அங்கு இடம் கிடைக்க நீட் தேர்வில் 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
* வாய்ப்பு 2 : அரசு நடத்தும் மருத்துவ கவுன்சிலிங் மூலம் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் 6 லட்சம் ரூபாய்.
* வாய்ப்பு 3 : [இதை நான் பரிந்துரைப்பதில்லை] தனியார் மருத்துவ கல்லூரிகளில் நேரடியாக எம். பி. பி. எஸ். படிப்புகளில் சேரலாம், மிக மிக அதிகமாக செலவாகும். இது கோடீஸ்வர மாணவர்களுக்கு மட்டுமே சாத்தியம். அனைவருக்குமானது அல்ல.
நீட் மதிப்பெண் இல்லாமல் மருத்துவ துறையில் சாதிக்க வேறென்ன படிக்கலாம் என்ற விபரம் கீழ்க்காணும் வழிகாட்டி வீடியோவில் உள்ளது பார்த்து அறிந்து கொள்ளவும். https://www.youtube.com/watch?v=ktLbr2T2S68
*குறிப்பு : தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகள் (Paramedical), கால்நடை அறிவியல் (Veterinary Science) படிப்புகள், விவசாய படிப்புகள் (Agriculture), மீன்வள (Fisheries) படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் தேவை இல்லை (NEET marks not needed), +2 மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகின்றது.
*குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த வருடம் மீண்டும் நீட் தேர்வு எழுதலாமா ?
முதல் முறையாக நீங்கள் நீட் தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்து இருந்தால் நிச்சயம் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதுங்கள். அதிக மதிபெண் எடுக்க வாய்ப்புள்ளது. 300-க்கு கீழ் எடுத்து இருந்தால் மீண்டும் முயற்சி செய்வதில் பெரிய அளவில் பயன் கிடைக்க வாய்ப்பு மிக குறைவு (அரசு பள்ளி மாணவர்களை தவிர).
எனவே மிக குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் மீண்டும் நீட் எழுதுகின்றேன் என்று கோச்சிங் சென்டர் சென்று பணம் கட்டி ஏமாற வேண்டாம்.
* S. சித்தீக் M.Tech

Comments
Post a Comment