இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழுக்கே தகுதி! - காயிதே மில்லத்

*கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் இந்திய அரசமைப்பு கூட்டத்தில் ( 14.09.1949 ) பேசியது: " இங்கே ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகவும் பழமையான மொழியாகவும் அது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியும். " எனக் கூறினார்கள்... இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால்,
நான் ஒரு உண்மையை இச்சபை முன்பு தைரியமாகக் கூற விரும்புகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ் தான். அதாவது திராவிட மொழிகளே இந்நாட்டின் புராதன மொழிகள் என நான் துணிந்து கூறுகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட முதல் மொழி திராவிட மொழியே என்ற எனது கூற்றை எந்த வாலாற்றாசிரியராலும் மறுக்க முடியாது. எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது மிகவும் புராதனமான மொழி. இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்... இம்மொழியைத் தான் நமது தேசிய மொழியாக வேண்டும் என நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் நிலைமையைப் புரிந்த கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், பழமையான மொழியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், புராதனமானதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், இந்நாட்டின் தேசிய மொழியாக தமிழைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ( 73 ஆண்டுகளுக்கு முன்பே 14.09.1949 அன்று அரசியல் நிர்ணய சபையில், தேசிய மொழி பிரச்சனை விவாதத்திற்கு வந்தபோது... கவ்மின்_காவலர் கண்ணியமிகு காயிதெ மில்லத் (ரஹ்..) அவர்கள் ஆற்றிய உரை இது. )

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!