இந்திய குடியரசுத் தலைவருக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பு! ( மலரும் நினைவுகள் )
*19 செப்டம்பர் 2022 - இன்றுடன் விடைபெற்ற இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களின் நினைவலைகள்:
இந்தியாவின் இரண்டாம் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக 1963 -இல் லண்டன் சென்றிருந்த போது மகாராணி எலிசபெத் ரயில் நிலையத்திலிருந்து கௌரவித்து தனது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு தனது சாரட் (குதிரை) வண்டியில் அழைத்துச் செல்லும் காட்சியைக் காணொலியில் காணுங்கள்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
தகவல் - காணொலி அனுப்பியவர்: ஜமால் முஹம்மது
Comments
Post a Comment