பஞ்சாப் முதல்வர் பற்றி அவதூறு : ஆம் ஆத்மி வசீகரன் கண்டனம்!

ஆம்ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் நா. வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதன் முதலமைச்சராக பகவத் மான் பதவியேற்று சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது சரித்திரம் வாய்ந்த வெற்றி ஆகும். யாரும் எதிர்பார்க்காத இந்த வெற்றி பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ், அகாலிதள் ஆகிய கட்சிகளை இருக்கிற இடம் தெரியாமல் செய்துள்ளது. இதற்கு காரணம் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவத் மான் ஆவார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பகவத் மான் மீதும் ஆம் ஆத்மி கட்சி மீதும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் ஜெர்மனி நாட்டுக்கு சென்று இருந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மீது அவதூறாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில், 'விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார் ' என்ற தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அவதூறான செய்தியை தினமலர் நாளிதழ் மற்றும் பல ஊடகங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல் என்று ஜெர்மன் நாட்டு விமானமான லுப்தான்சா தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து அவதூறு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இது போன்ற தவறான தகவல் பரப்புவோர் மீது தமிழக ஆம் ஆத்மி கட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு வசீகரன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!