இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள்!

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில்
3-9-2022 அன்று பேராசிரியர் கே. எம்.காதர் மொஹிதீன் தலைமையில் நடைபெற்றது. தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி வரவேற்புரை ஆற்றினார். கேரள மாநில தலைவர் சையது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில முதன்மை துணை தலைவர் - வக்பு வாரிய தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், துணை தலைவர் நவாஸ் கனி எம். பி., கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி, தேசிய மகளிர் அணி தலைவி பாத்திமா முஸப்பர் எம்.சி., பேராசிரியர் முனைவர் சேமுமு.முகமதலி மற்றும் தேசிய - மாநில நிர்வாகிகள், மாணவர் அணி, மகளிர் அணி மற்றும் செயற்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும், வரலாற்று சின்னங்களை அந்தந்த வகுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும், கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா விமரிசையாக கொண்டாடவும்- அனைத்து மாநிலங்களிலும் தேச - நேச நல்லிணக்கப் பயணம் நடத்தவும், தர்ம சன்சாத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் மத வெறி பேச்சுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!