துபை நூலகத்திற்கு தமிழக நூல்கள் அன்பளிப்பு!
துபை நகரின் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள முஹம்மது பின் ராஷித் நூலகத்தில்
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக பிரிவின்
தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன், நூலகத்தின் ஆலோசகர் டேவிட் ஜெரால் ஹிர்ச்சிடம்
சமீபத்தில் கல்லூரியில் வெளியிடப்பட்ட பிரான்ஸ் நாட்டு வரலாற்று அறிஞர் J.B.P. மோரே எழுதிய 'JAMAL MOHAMED INDIAN MERCHANT PRINCE AND NATIONALIST' என்ற நூல் வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரியில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் ராஜா முஹம்மது தொகுத்தளித்த 'MUSLIMS OF TAMILNADU IN THE INDIAN FREEDOM STRUGGLE' என்ற ஆங்கில நூலும் வழங்கப்பட்டது. அப்போது முன்னாள் மாணவர் சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், தஞ்சாவூர் மன்னர் மன்னர், கூத்தாநல்லூர் பெரோஸ் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*****
தகவல்: ஜமால் முஹம்மது




Comments
Post a Comment