பொன்னியின் செல்வன் - வரலாறும் திரிபும்!

உண்மை வரலாற்றில் ஆதித்த கரிகாலனை கொன்றது நம்பூதிரி பிராமணர்கள். அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களை அவர்கள் குடும்பத்தோடு நாடு கடத்தினான் ராஜராஜன். மேலும் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட கேரளாவில் உள்ள சாலை என்ற பகுதியில் இருந்த பிராமண பயிற்சி நிலையங்களை அழித்தவன் ராஜராஜ சோழன். அதனால் காந்தளூர் சாலை களம் அறுத்து அருளி என்ற பெயர் பெற்றவன் ராஜராஜன். சோழர்களின் காலத்தில் கோயில்களில் தமிழில் தான் வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் சிதம்பரத்தில் நம்பூதிரி பிராமணர்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் திருமறைகள் ராஜராஜனின் முயற்சியால் தமிழர்கள் கைக்கு கிடைத்தது. ஏடு கண்டானடி தில்லையிலே என்ற பாடல் கூட பழைய ராஜராஜன் படத்தில் வரும். வரலாறு இப்படி இருக்க கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் சோழர்களுக்கு விசுவாசமானவராக ஆழ்வார்கடியான் என்ற ஒரு பிராமணனை காட்டியிருப்பார். உண்மை வரலாற்றில் பழவேற்றரையர்கள் சோழர்களுக்கு மிகவும் விசுவாசம் ஆனவர்கள். ஆனால் நந்தினி என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி இவர்களை தவறானவர்கள் போல சித்தரித்து இருப்பார் கதையில். கற்பனை கதாபாத்திரம் நந்தினி போன்ற இழிவான குணாதிசயம் தமிழ் பெண்களுக்கு நிச்சயம் கிடையாது. பாண்டியர்களும் இவ்வளவு இழிவாக சூது செய்பவர்களும் அல்ல. இதுதான் உண்மையை மறைத்து வரலாற்றை திரித்து ஆதாயம் காண்பது. ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதற்கு கல்வெட்டு சான்று உள்ளது. மேலும் அந்த கல்வெட்டில் கொன்றவர்கள் பெயர்கள் கூட இடம் பெற்றிருக்கிறது. உண்மை இப்படி இருக்க ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் பேட்டி கொடுக்கும் போது ஆதித்த கரிகாலனின் கொலை இன்று வரை மர்மமாகவே உள்ளது என்பது போல பொய் உரைப்பது வழக்கம்! மேலும் விவரங்களுக்கு: ஏ. கே. இராசன் எழுதிய குந்தவை நாச்சியார் நூலை வாசிக்கவும். தொடர்புக்கு: ஏ.கே.இராசன் 9894435327.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!