நபிகள் நாயகம் பிறந்தநாள்!

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி ( ஸல் ), நபிகள் நாயகம் என்று போற்றப்படுகிறார். வானவர் தூதர் ஜீப்ரீல் மூலம் ஒவ்வொரு வசனமாக நபிகள் நாயகத்தின் காதில் ஓதி இறுதி வேதம் குர்ஆனை இறைவன் உலக மக்களுக்கு அனுப்பி வைத்தான். நபிகளாரின் வாழ்வும் வாக்கும் ஹதீஸ் என அழைக்கப்படுகிறது. ஆதி மனிதர் ஆதம் நபி காலத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கம் இறைவனால் வழங்கப்பட்டு, முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு உலக மக்களுக்கு வாழ்வியல் நெறியாக வழிகாட்டி வருகிறது. உலக அமைதி, சமாதானம், அன்பு, சகோதரத்துவம், வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அன்றாடம் வழிகாட்டும் ஒளி விளக்காக நபிகள் நாயகத்தின் வாழ்வு - சொல்லும் செயலும் இருக்கிறது. அனைவருக்கும் மீலாது நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்) வாழ்த்துக்கள்! **** - ஜே.மீராமைதீன், மூத்த பத்திரிகையாளர்.

Comments

Popular posts from this blog

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!