இங்கிலாந்து : ஜனநாயக அதிசயம்!

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி ஏற்ற 45 நாட்களிலேயே பதவி விலகியுள்ளார். ** இங்கிலாந்தில் ஜனநாயக அதிசயம் அடிக்கடி நடக்கிறது! முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் தனது இல்லத்தில் மது விருந்து விழா நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்திய வம்சாவளி அமைச்சர் ரிஷி சுனக் உள்பட சில அமைச்சர்கள் பதவி விலகினர். இதனை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். புதிய தலைவர் போட்டியில் லிஸ் டிரஸ், ரிஷி சுனக் ஆகியோர் களமிறங்கினர். லிஸ் டிரஸ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் போரிஸ்ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக லிஸ் டிரஸ்சை இரண்டாம் எலிசபத் நியமித்தார். அதிக வருமானம் உள்ளவர்களுக்கு 45 சதவீதம் வரி உயர்வு ரத்து செய்யப்பட்டதால், பங்குச் சந்தை சரிந்தது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இதற்கு காரணமான நிதி அமைச்சர் குவாசியை 38 நாளிலேயே பதவி நீக்கம் செய்தார்.புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்பட்டு, வரிக்குறைப்பு வாபஸ் ஆனது. இந்த பிரச்சனை காரணமாக லிஸ் பதவி விலகினார். அங்கே ஜனநாயகம் வாழ்கிறது. ஆனால் சில நாடுகளில் மக்கள் எவ்வளவு தான் அதிருப்தி தெரிவித்தாலும் - 'கழுவி கழுவி ஊற்றினாலும்' சிலர் பதவியில் ஒட்டிக் கொண்டு விலக மறுக்கின்றனர்!

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!