கோவை விபத்து: நியாயமான விசாரணை தேவை!
கோவை கோட்டைமேடு பகுதியில் காரில் ஏற்பட்ட சிலிண்டர் வெடி
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் ( 25 ) என்பவர் முஸ்லிம் என்பதால் அவர் மீது பிஜேபி தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம் எல் ஏ போன்றோர் தீவிரவாதி என அவதூறு பரப்பி மதக் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு முஸ்லிம் பயங்கர விபத்தில் பாலியானதற்கு இந்துத்துவா தீவிரவாதிகள் மீது தானே சந்தேகப்பட வேண்டும்? கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக பிஜேபி உள்ளிட்ட மதவாத இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உயிரிழந்த ஜமேஷா முபீன் மீது எந்த வழக்கும் இல்லை என்று டிஜிபி சைலந்திர பாபு கூறியுள்ளார். குற்றப் பின்னணி இல்லாத ஒருவர் மீது எப்படி இவ்வாறு கூறப்படுகிறது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Comments
Post a Comment