கோவை சம்பவம்: விபத்து குண்டு வெடிப்பாக மாறியது எப்படி?

கோயம்புத்தூர் சம்பவத்தை பற்றி இன்று விரிவாக பேசுகிறேன் .... இஸ்லாமியர்களே எவனாவது உங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையே இதில் தொடர்பு படுத்தி, அவதூறாக பேசினால் அவர்களை... நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ...
காவல்நிலையத்தில் வழக்கு இருந்தாலே, அந்த குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் கண்காணிப்பில் தான் இருப்பார் ... என் ஐ ஏ சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்தவர், எப்படி கண்காணிப்பில் இல்லாமல் இருந்திருப்பார்? இப்படி அந்த வழக்குகளில் இருந்தவர், அவ்ளோ நாட்டு வெடி குண்டுக்கான மூலப் பொருட்களை வீட்லையா வச்சிருந்திருப்பாரு ? இதுல ஐ எஸ் ஐ எஸ் கூட தொடர்பு படுத்தி பேசப்படுபவர் வெடி குண்டு தயாரிக்க தேவையான பொருட்கள அமெசான் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங்லையா வாங்கியிருப்பாரு ? லாஜிக்கே இல்லையே? கார் சிலிண்டர் வெடிப்பு, எப்படி அண்ணாமலை சொன்னப்பிறகு வெடி குண்டு விஷயமா மாறுது ? காவல்துறையோட புலன் விசாரணை விஷயங்கள்லாம் எப்படி அண்ணாமலைக்கு தெளிவா தெரியுது ? அப்போ வழக்கு விசாரணை அண்ணாமலை ஆர்டர் படி தான் போகுதா ? சம்பந்தப்பட்டவர்களோட வாட்ஸ் அப் மெஸேஜ் ஸ்டேட்டஸ் லாம் அண்ணாமலைக்கு எப்படி கிடைச்சிருக்கும் ? அப்படின்னா சம்பந்தப்பட்டவர்கள் லாம் அண்ணாமலையோட ஆட்களா ? என் ஐ ஏ அண்ணாமலைய விசாரிக்குமா ? தவறு யார் செய்திருந்தாலும் தவறு தான் ... இன்னும் என்னவென்று உறுதியாக தெரியவில்லை . அதற்குள்ளாக ஒட்டு மொத்த சமூகத்தையே தவறாக பேசுவது வன்மம், வக்ரம் .... நாம் முன்பே சொன்னது போல சங்பரிவார்கள் அரசியல் நோக்கத்திற்காக தங்களுடைய வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்! சிறுபான்மையினர்களே, தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள்! - சத்யபிரபு செல்வராஜ் ( முகநூலில் )

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!