சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கல்லு பள்ளிவாசல்!
**தஞ்சாவூரை ஆட்சி செய்த அருள் மொழி வர்மன் என்கிற ராஜ ராஜ சோழன் (947) பிறப்பதற்கு 208 ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய திருச்சி கோட்டை இரயில் நிலையம் நேர் எதிர்ப் புறம் இருக்கும் பள்ளிவாசல் கி.பி 738 ( 116 ஹிஜ்ரி) ஆண்டு தமிழ் கட்டிடக்கலையில் சோழர்கள் ஆட்சி பகுதியில் கட்டப்பட்ட முதல் கல்லு பள்ளிவாசல். அப்போது உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட சோழ மன்னனின் ஆட்சிக் காலத்தில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பள்ளிவாசலில் இந்த கல்லுப் பள்ளியும் ஒன்று! சுமார் 50 நபர்கள் வரிசையில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு இடம் கொண்டது. பிற்காலத்தில் அதிகம் பேர் தொழுவதற்காக அப்பள்ளிவாசல் வெளிப்புறம் விரிவாக்கம் செய்துள்ளனர்.
கி.பி 7ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் கி.பி 8 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் இஸ்லாமிய மார்க்கம் தமிழர்களின் வாழ்வோடும் இரண்டறக் கலந்து அறிமுகமாகி இருந்தது என்பதற்கு இந்த இந்த கல்லுப் பள்ளி ஒரு சான்றாகும்.
தற்போது அதை மக்கா பள்ளிவாசல் என்று அங்குள்ள உள்ளூர்வாசிகளால் பெயர் வைத்து அழைக்கப்படுகிறது, 1300 ஆண்டுகளாக ஐவேளை தொழுகை நடைபெற்று வருகின்றது என்பது கூடுதல் சிறப்பு!
- **அப்துல் வாஜித்
** (திருச்சி உறையூர் கல்லுப்பள்ளி
படஉதவி: ஜாபர் சாதிக்)




Comments
Post a Comment