10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை: முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினருக்கு ஒன்றிய பிஜேபி அரசு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிரான வழக்கில், பெரும்பான்மை நீதிபதிகள் கருத்து அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழ்நாடு கருதுகிறது. எனவே, இது தொடர்பாக திமுக அரசு அனைத்துக் கட்சியினர் கூட்டத்தை நடத்தியது. அதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அதிமுக, பிஜேபி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தில் சமூக நீதிக்கு எதிரான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது எனவும், இது தொடர்பான தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில்
மேல் முறையீடு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி இருக்காது - திறமை இருக்காது என்று கூறியவர்கள், இப்போது 10 சதவீத ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மாதம் 60 ஆயிரம் வருமானம் உள்ளவர்கள் ஏழைகளா? பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!