இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா! மூத்த இஸ்லாமிய அறிஞர் வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் 2023 மார்ச் 10 ஆம் நாளில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து மூத்த இஸ்லாமிய அறிஞர் மவ்லவி எம். எம். மதனி ஹஸ்ரத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
காயிதே மில்லத், பாபக்கீஹ் தங்ஙள், மஹ்பூபே மில்லத்
சுலைமான்சேட்ஜீ,
முஜாஹிதே மில்லத் பனாத்வாலா, கேரளச் சிங்கம் CH முஹம்மது கோயா, மறுமலர்ச்சி அதிபர் மவ்லவி A.K.ஜமாலி, தாய்ச்சபை தளபதி திருப்பூர் முஹ்யித்தீன், சந்தனத் தமிழறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது,
எளியோரின் தோழர் முன்னாள் எம் பி காஜா முஹ்யித்தீன்,
நாடறிந்த நாவலர் A.M.யூசுப், பிரச்சார பீரங்கி M.M. பீர்முகம்மது, அற்புத திறன்மிக்க பன்மொழி அறிஞர் அப்துல் லத்தீப்,
இன்றைய முத்தான தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதிர் முஹ்யித்தீன் ஆகிய அளப்பெரும் ஆற்றல்மிக்க ஆன்றோராகிய தலைவர்களுடன் பழகிய, பயணம் சென்ற, உரையாடிய, உறவாடிய,
மிகச்சில முஸ்லிம்லீக் மூத்த ஊழியரில் நானும் ஒருவன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் என்று மதுரையில் வசிக்கும் 80 வயது மூத்த இஸ்லாமிய அறிஞர்
மவ்லவி முஹம்மது முஹ்யித்தீன் மதனீ,
( சவூதி அரசின் இஸ்லாமிய மேனாள் துபை பிரதிநிதி ) தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment